விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், பவர் கிரிட் நிறுவனம் இணைந்து தமிழகத்தில் விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைத்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருவண்ணாமலை-திண்டிவனம் சலையில் நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.