FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

860 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் வியாழக்கிழமை (டிச.20) பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் வியாழக்கிழமை (டிச.20) பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சட்டப்படி, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை தமிழகத்தில் 2019 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. 
இந்த ஆணையின்படி,  ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை மற்றும் இடமாற்றம் செய்வது தடை செய்யப்படுகிறது.
மேலும்,  டீ கடை, பெட்டிக் கடை, சிற்றுண்டி, மளிகை, பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் தடிமன் வேறுபாடின்றி இருக்க வலியுறுத்துவதென கிராம ஊராட்சிகளில் 2019 ஜனவரி 1 முதல் தடை செய்யப்பட உள்ளது. 
இதுகுறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை (டிச.20) மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments