செங்கத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
செங்கம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட துணைச் செயலர் அமுதாஅருணாச்சலம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், மாநில விவசாய அணிச் செயலர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலருமான சேவூர்
எஸ்.ராமச்சந்திரன், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடி குழு அமைத்தல், அதற்கான நிர்வாகிகள் தேர்வு, வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். கூட்டத்தில் எம்எல்ஏ தூசி கே.மோகன், தலைமைக் கழகப் பேச்சாளர் வெங்கட்ராமன், மகரிஷி மனோகரன், மாவட்ட துணைச் செயலர் துரை, திருவண்ணாமலை நகரச் செயலர் செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நைனாக்கண்ணு, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் அருணாசலம், தண்டராம்பட்டு ஒன்றியச் செயலர் ராஜா (எ) தேவராஜன், இலக்கிய அணி மாவட்டச் செயலர் நாராயணன், பேரவை ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சங்கர், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.