உலக சுற்றுச்சூழல் தினம்
வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர் என்.ஈஸ்வரி தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஜி.கலைவாணி, அமுதா, ஹேமலதா, கல்பனா, ஆர்.கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.
ஜீவா வேலு பள்ளியில்...:
இதேபோல, திருவண்ணாமலை ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். இயக்குநர் பொன்.முத்து முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள் மேகராஜன் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில், மழைநீர் சேமிப்பின் அவசியம், வேளாண் விளை பொருள்களை இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிப்பதால் ஏற்படும் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டன. விழாவில், பள்ளி ஆலோசகர் எம்.ரவிச்சந்திரன், முதுகலை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.