FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த தான விழிப்புணர்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ரத்த தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2018, 9:25 am IST
பகிர்:

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ரத்த தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் உலக ரத்தக் கொடையாளர் தின விழா நடைபெற்றது. 
விழாவுக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வர் நடராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஷகில் அஹமது, மருத்துவமனை கண்காணிப்பாளர் குப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தொடர் ரத்த தானம் அளித்த கொடையாளர்களைப் பாராட்டி பாராட்டுச் சான்று வழங்கினார்.
தொடர்ந்து, ரத்த தான முகாம் நடைபெற்றது. மேலும், ரத்த தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலியும், ரத்த தான விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
இதில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு மருத்துவர்கள், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் பலர் கலந்து  கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments