சண்முகா அரசுப் பள்ளிக்கு 6 தங்கப் பதக்கங்கள்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் திருவண்ணாமலை
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
காஞ்சிபுரத்தில் ஜூன் 11 முதல் 20-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டியில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 18 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பாட்டுப் போட்டி, குழு நடனப் போட்டிகளில் 21 பள்ளிகள், 9 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் துப்பாக்கிச் சுடுதல், பாட்டு, குழு நடனம் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து 6 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், பயிற்றுவித்த பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் விஜய் ஆனந்த் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் ஒய்.ஜெயராஜ் சாமுவேல் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.