FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் துறவிகள் தங்குவதற்கு தனி இடம் ஒதுக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையில் துறவிகள் தங்குவதற்கு தனி இடத்தை தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்று துறவிகள் திருக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 26 ஜூன் 2018, 9:26 am IST
பகிர்:

திருவண்ணாமலையில் துறவிகள் தங்குவதற்கு தனி இடத்தை தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்று துறவிகள் திருக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி ஓங்கார ஆஸ்ரமம் சார்பில் 28-ஆவது ஆண்டு மகா கிரிவல வழிபாடு திருவண்ணாமலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓங்கார ஆஸ்ரம அதிபர் கோடீஸ்வரானந்தா தலைமை வகித்தார். சாதுக்கள், சன்னியாசிகள், துறவியர்கள் சேர்ந்து பஞ்சாட்சரத்தை உச்சரித்துபடி கிரிவலப் பாதையில் ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து, கிரிவலப் பாதையில் உள்ள ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் சிவபஞ்சாட்சர ஜெப வேள்வி மற்றும் சன்னியாசிகளுக்கான மகேஸ்வர பூஜை நடைபெற்றது. 
இதையடுத்து, அகில பாரத துறவியர் சங்கச் செயலாளர் ராமானந்தா சுவாமிகள், ஒருங்கிணைப்பாளர் வேதாந்த ஆனந்த சுவாமிகள் ஆகியோர் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினர். பின்னர் நடைபெற்ற துறவிகள் திருக்கூட்டத்தில், திருவண்ணாமலை, வாராணசி, ராமேஸ்வரம், மயிலாடுதுறை நகரங்களை புனித நகரங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் துறவிகளை துன்புறுத்தக் கூடாது. திருவண்ணாமலையில் வாழும் துறவிகள் தங்குவதற்கென தனி இடத்தை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகா கிரிவலம்: தொடர்ந்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள மகிழ மரம் பகுதியில் இருந்து உலக அமைதிக்கான 28-ஆவது ஆண்டு மகா கிரிவலம் தொடங்கியது. 
இதில், அஷ்டலிங்க பரிபாலன கமிட்டி நிர்வாக உறுப்பினர் ராமச்சந்திர உபாத்யாயா, அருணகிரிநாதர் விழாக் குழுத் தலைவர் வ.தனுசு, ஓங்கார ஆஸ்ரம அரங்காவலர்கள் வி.எம்.ராஜசேகர், செள.கருணாகரன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments