அரசுப் பள்ளியில் ஐம்பெரும் விழா
செய்யாறு வட்டம், காழியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, மாற்றுத் திறனாளி மாணவருக்கு சுழலும் நாற்காலி (வீல் சேர்) வழங்குதல், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகராதி வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல்
செய்யாறு வட்டம், காழியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, மாற்றுத் திறனாளி மாணவருக்கு சுழலும் நாற்காலி (வீல் சேர்) வழங்குதல், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகராதி வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், இன்ட்ராக்ட் சங்கம் தொடக்கம் என ஐம்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் க.கோவேந்தன் தலைமை வகித்தார். சங்கப் பயிற்றுநர் ஆர்.ஸ்ரீதர், முன்னாள் தலைவர் ஜெ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சீனுவாசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சங்க விரிவாக்கப் பணியின் மாவட்டத் தலைவர் தி.எ.ஆதிகேசவன், மாற்றுத் திறனாளி மாணவருக்கு சுழலும் நாற்காலி மற்றும் பள்ளிக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, இன்ட்ராக்ட் சங்கம் தொடங்கப்பட்டதுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் சங்கச் செயலர் எஸ்.மோதிலால், எஸ்.சந்தோஷ்குமார், வழக்குரைஞர் ஏ.சான்பாஷா, தலைவர் தேர்வு சி.நாகராசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.