சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை: தன்னார்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்: ஆரணி நகராட்சி ஆணையர் தகவல்
ஆரணியில் ரூ.7-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை விற்பனை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் நகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்று ஆரணி நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தெரிவித்தார்.
ஆரணியில் ரூ.7-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை விற்பனை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் நகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்று ஆரணி நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆரணி நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் அனைத்துப் பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை ரூ.7-க்கு விற்பனை செய்ய வேண்டும். இதற்காக நகராட்சி சார்பில், 10 அடி அகலம், 10 அடி நீளத்துக்கு இடம் தேர்வு செய்து அளிக்கப்படும்.
தன்னார்வலர்கள் தங்களின் சொந்தப் பணத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரித்து பொதுமக்களுக்கு குறைந்த கட்டணமாக ரூ.7-க்கு விற்பனை செய்ய வேண்டும்.
மின்சாரக் கட்டணம் மற்றும் இதர செலவினங்கள் அனைத்தும் தன்னார்வலர்களையே சேரும். நகராட்சி சார்பில்
இட வசதி மட்டும் வாடகையில்லாமல் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.