தொழிலாளி வீட்டில் 25 பவுன் திருட்டு
செய்யாறு அருகே டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள்,
செய்யாறு அருகே டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள்,
ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வெம்பாக்கத்தை அடுத்த பல்லாவரம் கிராமம் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி துலுக்கானம் (46). இவர், புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தங்களது நிலத்தில் நடைபெற்ற நெல் அறுவடை பணிக்குச் சென்றார். பிற்பகல் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 25 பவுன் நகைகள், நெல் விற்ற பணம் ரூ.67 ஆயிரம், புதுமனை புகுவிழாவின்போது வந்த அன்பளிப்புப் பணம் ரூ.75
ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்ததாம். இதுகுறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.