FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வட்ட அளவிலான தடகள போட்டி: சூசைநகர் பள்ளி சிறப்பிடம்

போளூர் வட்ட அளவிலான ஆண்கள் தடகளப் போட்டியில் சேத்துப்பட்டை அடுத்த சூசைநகர் செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

போளூர் வட்ட அளவிலான ஆண்கள் தடகளப் போட்டியில் சேத்துப்பட்டை அடுத்த சூசைநகர் செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
போளூர் வட்ட அளவிலான ஆண்கள் தடகள போட்டி சேத்துப்பட்டை அடுத்த  சூசைநகர் செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், இந்தப் பள்ளி அணி ஜூனியர் பிரிவு, சீனியர் பிரிவு கால்பந்தாட்டப் போட்டி, 
கோ -  கோ போட்டியில் முதலிடமும், பூப்பந்து, கபடிப் போட்டிகளில் 2-ஆம் இடமும் பிடித்தது. தடகளப் போட்டியில் ஜூனியர் பிரிவில் மாணவர் பார்த்திபன், சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர் பவுன்
குமார் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். மேலும், மேற்கண்ட போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
போட்டிகளில் வென்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் ஜஸ்டின் அந்தோணிராஜ், தலைமை ஆசிரியர் குழந்தை அருள், உதவித் தலைமை ஆசிரியர் லியோ, உடல் கல்வி இயக்குநர் ஜான்கிறிஸ்டோபர், உடல் கல்வி ஆசிரியர் ராஜாபாபு, ஓவிய ஆசிரியர் பிச்சைமுத்து ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments