விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
திருவண்ணாமலை மாவட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் செயலர் சி.நாராயணசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.திருஞானம், மாவட்டப் பொருளாளர் க.துரைசாமி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கு.ஜோதி மற்றும் நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் அளித்தனர்.
அந்த மனுவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 2014-ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தாமதமின்றி திரும்பப் பெற வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
60 வயது நிரம்பிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். முற்போக்கான நில சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டும்.
எங்கள் கோரிக்கை மனுவை தங்கள் மூலம் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அதன்படியே, மனுவை அனுப்பி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உறுதி அளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.