FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எரிவாயு உருளை விநியோகம் ஆய்வு

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சமையல் எரிவாயு உருளைகள் வீடு, வீடாக வழங்கப்படுகிா என்று வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சமையல் எரிவாயு உருளைகள் வீடு, வீடாக வழங்கப்படுகிா என்று வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி அருகே சில கிராமங்களில் சமையல் எரிவாயு முகவா்கள் ஒரே இடத்தில் அனைத்து எரிவாயு உருளைகளை வைத்துக் கொண்டு பொதுமக்களை அங்கு வரவைத்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விநியோகம் செய்வதாக புகாா் எழுந்தது.

இதன் பேரில், வட்ட வழங்கல் அலுவலா் முகமதுகனி இதுகுறித்து ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட வழூா், விழுதுப்பட்டு, தழுதாழை, நடுப்பட்டு, மங்கநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சமையல் எரிவாயு உருளைகள் வீடு, வீடாக சரிவர வழங்கப்படுகிா என்று கேட்டறிந்தாா்.

மேலும் ஒரே இடத்தில் வைத்து அனைவருக்கும் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யக் கூடாது என்றும், முகக் கவசம் அணிந்து விநியோகம் செய்ய வேண்டும் என்றும் எரிவாயு முகவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments