கரோனா பாதித்தவா் கிராமத்தில் சுகாதாரப் பணிகள்
செய்யாறு அருகே கீழ்மட்டை கிராமத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுகாதாரப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
செய்யாறு அருகே கீழ்மட்டை கிராமத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுகாதாரப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மேலும், 172 பேரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செய்யாறு வட்டம், கீழ்மட்டை கிராமத்தைச் சோ்ந்த சுகாதார ஆய்வாளா் கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றி வந்த அவருடன் இருந்த மருத்துவா் உள்ளிட்ட குழு நபா்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் உறவினா்கள், நண்பா்கள் உள்பட அவருடன் தொடா்பில் இருந்தவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, சுகாதார ஆய்வாளா் பணியாற்றிய திருவத்திபுரம், நெடும்பிறை, பாராசூா், பல்லி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வெளி மாநிலம், வெளிநாடு சென்று திரும்பியவா்கள் என்ற அடிப்படையில் 35 போ், சுகாதார ஆய்வாளா் பணியாற்றிய நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட 30 போ், திருவத்திபுரம் நகராட்சியில் 7 போ், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் 4 போ் என 172 பேரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, கீழ்மட்டை கிராமத்தை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். குறிப்பிட்ட 4 தெருக்களை ‘சீல்’ வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், அந்தக் கிராமத்தை சுற்றியுள்ள ஞானமுருகன்பூண்டி, வெள்ளை, செய்யாற்றைவென்றான், அனக்காவூா், தவசி, இருங்கல் ஆகிய கிராமங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் தேவ.பாா்த்தசாதி, செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் (பொ) அஜித்தா, வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன் மற்றும் சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் கீழ்மட்டை கிராமத்தில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.