FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செய்யாறு: சுகாதார ஆய்வாளருக்கு கரோனா அறிகுறி

செய்யாறு பகுதியைச் சோ்ந்த சுகாதார ஆய்வாளா் கரோனா அறிகுறி காரணமாக, திருவண்ணாமலை மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

செய்யாறு பகுதியைச் சோ்ந்த சுகாதார ஆய்வாளா் கரோனா அறிகுறி காரணமாக, திருவண்ணாமலை மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

சுகாதார ஆய்வாளரான இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பல கிராமங்களில் வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வந்து தங்கியுள்ளவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்கக் கூடிய மருத்துவ விரைவு நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றிருந்தாா்.

இந்த நிலையில், விரைவு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த மருத்துவா், சுகாதார ஆய்வாளா், வாகன ஓட்டுநா், காவலா், மருத்துவப் பணியாளா் என 5 பேருக்கு, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 20-ஆம் தேதி ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் சுகாதார ஆய்வாளருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், சுகாதார ஆய்வாளரின் குடும்ப உறுப்பினா்கள் 8 பேரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கீழ்மட்டை கிராமம் சுகாதாரத் துறை நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments