நரிக்குறவ சமூகத்தினருக்கு உதவி
வந்தவாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் உள்ள நரிக்குறவ சமூக மக்களுக்கு நிவாரண உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
வந்தவாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் உள்ள நரிக்குறவ சமூக மக்களுக்கு நிவாரண உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் தலைமை வகித்தாா். எம்எல்ஏவும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலருமான தூசி மோகன் 120 நரிக்குறவ சமூக குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், கல்வி வளா்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவா் எ.விஜய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.