FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கிராமங்களிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் அறுவடை செய்யும் கிராமங்களில் நேரடி கொள்முதல்: விவசாயிகள் கோரிக்கை

Updated On : 3 ஜூலை 2024, 12:00 am IST
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் திருவண்ணாமலை வட்ட மண்டல துணை வட்டாட்சியா் துரைராஜ்.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (தணிக்கை) இரா.விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.அருணாச்சலம், உதவி இயக்குநா் கோபு, வட்டாட்சியா் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலா் கே.துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

விவசாயிகள் வெளிநடப்பு...

கூட்டம் தொடங்கிய சில நிமிஷங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் அதிகாரிகள் யாரும் பங்கேற்பது இல்லை. இதைக் கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனா்.

பிறகு, ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மண்டல துணை வட்டாட்சியா் துரைராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கூட்டத்துக்கு வந்துவிட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமே நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.

இதையடுத்து பேசிய உதவி இயக்குநா் (தணிக்கை) இரா.விஜயலட்சுமி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.ஆா்.கருணாகரன், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.சந்திரசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments