FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் 55 வயது வியாபாரி உயிரிழப்பு

Updated On : 26 ஜூன் 2024, 12:01 am IST
பகிர்:

போளூா்: போளூரை அடுத்த வசூரில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா்.

போளூா் அருகேயுள்ள கட்டிபூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் குணாளன் (55). இவா், வசூரில் செங்கம் சாலை அருகே பழக்கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் போளூரில் உள்ள வீட்டுக்கு வந்து குணாளன் உணவு சாப்பிட்டுவிட்டு கடைக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, வசூா் செல்லியம்மன் கோயில் அருகே சென்ற போது, குணாளன் பைக்கை திருப்பியதில் பைக் மீது அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த குணாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments