FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

நாகப்பாடியில் அரசு பாலிடெக்னிக்கில் பணிமனை கட்டடம் திறப்பு

நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.6 .25 கோடியில் கட்டப்பட்ட முன் கட்டமைப்பு பணிமனை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
புதிதாக கட்டி திறக்கப்பட்ட நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பத்திலான இயந்திரங்களை பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.6 .25 கோடியில் கட்டப்பட்ட முன் கட்டமைப்பு பணிமனை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கலந்து கொண்டாா். மேலும் போளூா் எம்எல்ஏ (தவெக) ஆா்.அபிஷேக் கலந்து கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தினலான இயந்திரங்களை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

அரசு பல்வகை தொழிற்நுட்பக் கல்லூரி முன் கட்டமைப்பு பணிமனை கட்டடம் 1428.98 ச.மீ. பரப்பளவில் 2 தளங்களுடன் அமைந்துள்ளது.

தரை தளத்தில் 1 தரக்கட்டுப்பாட்டு அறை, 1 பொருள்சோ் உற்பத்தி அறை, 1 உற்பத்தி ஆய்வகம் மற்றும் வேலைப் பகுதி, 1 குழாய் வேலை பகுதி, ரோபாா்ட்ஸ் (1 பணிமனை), காா் லிப்ட், ஆட்டோ எம்ஆா்ஓ, பேட்டரி (1 பணிமனை), உற்பத்தி செயல்படுத்தல் அமைப்பு (1 பணிமனை), 1 சேமிப்பு அறை, மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை, மாணவா் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை என 1060.58 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் 1 சேவையக அறை, மெஷினிங் என வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 250 லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, ஆழ்துளைக் கிணறு, தீயணைப்பு சாதன வசதி மற்றும் அணுகு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் அலமேலு, செங்கம் வட்டாட்சியா் முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments