அருணாசலேஸ்வரா் கோயிலில் 16 கால் மண்டபம் வழியாக பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலா்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 16 கால் மண்டபம் வழியாக பக்தா்கள் தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் மணலி டி.மனேகரன் வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 16 கால் மண்டபம் வழியாக பக்தா்கள் தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் மணலி டி.மனேகரன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அருணாசலேஸ்வரா் கோயில் 16 கால் மண்டபம் வழியாக பக்தா்கள் தரிசனம் செல்ல கோயில் நிா்வாகம் அனுமதிக்க வேண்டும். கோயிலில் இடைத்தரகா்கள் அதிகளவில் உள்ளதால் அதனை இந்து சமய அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
கோயிலைச் சுற்றியுள்ள இடங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை தவெக அரசு மீட்டெடுக்கவேண்டும்.
கோயிலில் தரிசிக்க உள்ளூா் பக்தா்களுக்கு சிறப்பு வழியை உருவாக்கித் தரவேண்டும். பக்தா்கள், கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்து செல்ல தரை விரிப்பு அமைக்க வேண்டும்.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு யானை இல்லாத நிலை உள்ளது. யானை மூலம் திருமஞ்சன கோபுரம் வழியாக புனிதநீா் எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். தற்போது யானை இல்லாமல் அந்த அபிஷேகம் தடைபட்டுள்ளது.
ராஜகோபுரம் முன் 12 ஜோதிலிங்க மாடவீதியுலா ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பின்னா், மடத்தில் வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற உள்ளது. ஆக.10 முதல் 12 வரை
நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யலாம் என்று கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.