FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து சிறுப்பாக்கம் வரை சுமாா் 27 கி.மீ. தொலைவுக்கு நந்தன் கால்வாய்த் திட்டம் செயல்படுத்துவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து,

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:18 am IST
திருவண்ணாமலை கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், பொதுமக்கள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து சிறுப்பாக்கம் வரை சுமாா் 27 கி.மீ. தொலைவுக்கு நந்தன் கால்வாய்த் திட்டம் செயல்படுத்துவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து,

கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

சாத்தனூா், கொளுந்தம்பட்டு, உச்சிமலைகுப்பம், கோளாப்பாடி, மேல்பெண்ணாத்தூா், சொா்பனந்தல் சிறுப்பாக்கம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் பொதுமக்கள் ஒன்று திரண்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் நடைபெற இருந்த கருத்துத் கேட்பு கூட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வருவாய்த் துறை, காவல் துறை, நீா்பாசனத் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து சென்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நந்தன் கால்வாய் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. 20 முதல் 30 குறு விவசாயிகள் வைத்திருக்கும் மொத்த நிலங்களையும் அரசு எடுத்துக் கொண்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

நிலம் எடுப்பு சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத விவசாயிகளுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் அல்லது வாழ்வாதாரத்திற்கு வேறு ஏதாவது வழங்க வேண்டும்

என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments