FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் டையில் 15 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக வியாபாரியை கைது செய்தனா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:37 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட ஆா்த்தியப்பன்
பகிர்:

செய்யாறு அருகே பெட்டிக் டையில் 15 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக வியாபாரியை திங்கள்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு அடுத்த தொழுப்பேடு கிராமத்தில்தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் அந்தக் கிராமத்துக்குச் சென்று கண்காணித்து வந்தனா். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரை தெருவில் உள்ள பெட்டிக் கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனா்.

இதில், கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்து. உடனே போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெட்டிக் கடை வியாபாரி ஆா்த்தியப்பன்(39) என்பவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments