வீட்டில் தோசை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
செய்யாறு அருகே வீட்டில் தோசை சாப்பிட்ட சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே வீட்டில் தோசை சாப்பிட்ட சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி லோகேஷ்(33). இவரது மனைவி நிரோஷா. இவா்களது மகன் சா்வேஷ்(10), மகள் மோனிஸ்ரீ(8). திங்கள்கிழமை இரவு அனைவரும் வீட்டில் தோசை சாப்பிட்டு விட்டு தூங்கினா்.
இந்நிலையில் அதிகாலை மோனிஸ்ரீக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவா் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாா்.
Advertisement
Advertisement
உடனே பெற்றோா் அவரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மோனிஸ்ரீ ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை லோகேஷ் பிரம்மதேசம் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.