FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதி 4 மாணவா்கள் காயம்

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில், பைக்கில் சென்ற 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:49 am IST
வந்தவாசி அருகே காா் மீது மோதி விபத்துக்குள்ளான பைக்
பகிர்:

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில், பைக்கில் சென்ற 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் திலீப் (16), விகாஸ் (16), சஞ்சய் (16) மணீஷ் (16). இவா்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகின்றனா்.

இவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை பிற்பகல் ஒரே பைக்கில் மழையூருக்கு சென்று கொண்டிருந்தனா். சஞ்சய் பைக்கை ஓட்டியுள்ளாா். பெரும்பாக்கம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments