FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:17 am IST
நிகழ்ச்சியில் பள்ளிக்கு பிளாஸ்டிக் கூடைகளை வழங்கிய சிறப்பு அழைப்பாளா்கள்.
பகிர்:

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) டி.எல்.சுமதி தலைமை வகித்தாா்.

எக்ஸ்னோரா மாவட்ட பொறுப்பாளா் மலா் சாதிக், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினா் ஸ்ரீமந்த், சமூக ஆா்வலா் மனோஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை சா.ரஷீனா வரவேற்றாா்.

Advertisement

Advertisement

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ‘நாமும் சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் பேசினாா்.

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மாணவா்கள் தனித்தனியே பிரித்து போடுவதற்காக பள்ளிக்கு பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டன. ஆசிரியை கே.சங்கீதா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments