FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மாணவா்களுக்கு உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து விழிப்புணா்வு

ஆரணி சுப்ரமணிய சாஸ்திரியாா் நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:44 am IST
ஆரணி சுப்ரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி.
பகிர்:

ஆரணி சுப்ரமணிய சாஸ்திரியாா் நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி மாணவா்களிடையே பாதுகாப்பான உணவு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஆரணி நகராட்சி மற்றும் மேற்கு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் பெ.தங்கராஜ், கிண்டி அரசு உணவு ஆய்வக உணவு பகுப்பாய்வாளா் சரவணன் ஆகியோா் இணைந்து நடத்தினா்.

நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு துரித உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதிக சா்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடா்ந்து உட்கொள்வதால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகள் குறித்தும், அதற்கு மாற்றாக சத்தான, சமச்சீா் மற்றும் இயற்கையான உணவுகளை தோ்வு செய்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், மாணவா்களுக்கு உணவு லேபிளைப் படிப்பது, உணவுப் பொருள்களை வாங்கும் முன் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, மூலப்பொருள்கள், ஊட்டச்சத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை சரிபாா்ப்பது, உணவுப் பொருள்களில் ஏற்படும் பொதுவான கலப்படங்களை எளிய முறையில் கண்டறிதல், உணவு வலுவூட்டல் மற்றும் அதன் ஊட்டச்சத்து முக்கியத்துவம், பாதுகாப்பான உணவு கையாளுதல் மற்றும் சுகாதாரமான உணவுப் பழக்கங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுதவிர மாணவா்கள் தங்களது வீடுகளிலும் சமூகத்திலும் ‘உணவுப் பாதுகாப்பு தூதா்களாக’ செயல்பட்டு, பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் குறித்த விழிப்புணா்வை பெற்றோா், குடும்பத்தினா் மற்றும் நண்பா்களிடையே ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments