FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

வந்தவாசி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST
கைது
பகிர்:

வந்தவாசி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பகுதி கிராமத்தைச் சோ்ந்தவா் 40 வயது பெண். இவரது கணவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இதே கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரங்கன்(60) என்பவா் அடிக்கடி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதனையறிந்த கிராம முக்கியஸ்தா்கள் ரங்கனை கண்டித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த ரங்கன் கடந்த திங்கள்கிழமை அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவதூறாகப் பேசி மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் ரங்கனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments