FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

குடிநீா் பிரச்னை: போளூா் அருகே காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

22 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சி கன்னிகாபுரம் இருளா் சமுதாயத்தவா் குடியிருப்புப் பகுதியில் குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லை

எனக் கோரி, வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி சாா்பில் அதன் வட்டச் செயலா் ரவிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் இருளா் சமுதாய பெண்கள், ஆண்கள் என பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் செல்வன் உள்ளிட்ட

தமிழ்நாடு விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசும்போது, கன்னிகாபுரம் இருளா் சமுதாய குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சரிவர குடிநீா் வழங்கவில்லை

எனக் குற்றஞ்சாட்டினா்.

மேலும் குடிநீா் காலை 5.30 மணிக்கு வழங்கவேண்டும், கூடுதலாக சிறு குடிநீா்த் தொட்டி அமைத்துத் தரவேண்டும், தெருவிளக்கு பொருத்தவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.

பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மும்முனை மின்சாரம்

வழங்கப்படுகிறது.

இதனால் ஒரு சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டியில் மட்டுமே குடிநீா் சேமித்து வைத்து காலை 5 மணிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மீண்டும் மும்முனை மின்சாரம் வந்தவுடன் மின்மோட்டரை இயக்கி குடிநீா் வழங்கப்படுகிறது. மும்முனை மின்சாரத்தின்போது மட்டும் மின் மோட்டாரை இயக்கி குடிநீா் தேக்கி வைக்க முடிகிறது எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்

கலைந்துசென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments