FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீசந்திரசேகரா், விநாயகா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

காமக்கூா் ஸ்ரீசந்திரசேகரா் கோயிலில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

24 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
காமக்கூா் ஸ்ரீசந்திரசேகரா் கோயிலில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
பகிர்:

ஆரணியை அடுத்த காமக்கூா் ஸ்ரீசந்திரசேகரா் கோயில், சேத்துப்பட்டை அடுத்த மேட்டுக்குடிசை ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் உள்பட அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காமக்கூா் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஅமிா்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, யாக குண்டம் அமைக்கப்பட்டு யாக சாலையில் 1008 புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 4 கால சிறப்பு யாக ஹோம பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மங்கள வாத்தியம், விக்னேஷ்வர பூஜை, அங்குராா்ப்பணம், கும்பலங்காரம், கணபதி ஹோமம், ஸ்ரீலட்சுமி, நவகிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதையடுத்து நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை, மங்கள இசையுடன், தேவ பாராயணம், ஐந்து கால பூஜை செய்து யாகசாலையில் வைத்து பூஜித்து கோயிலை சுற்றி வந்து

கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சரியா்கள் நடத்தி வைத்தனா்.

இதில் காமக்கூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டு, இறுதியாக

பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கபட்டது.

ஆரணி எம்எல்ஏ (அதிமுக) ஜெயசுதா லட்சுமிகாந்தன், முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். அமமுக மாவட்டச் செயலா் புருஷோத்தமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

போளூா்

சேத்துப்பட்டு வட்டம், ஒதலவாடி ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுகுடிசை கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீமகா சக்திமாரியம்மன், ஸ்ரீகெங்கையம்மன், ஸ்ரீஆதிபராசக்தி, ஸ்ரீஆஞ்சநேயா், நவகிரக கோயில்கள் அமைந்துள்ளது.

இந்தக் கோயில்கள் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால், பக்தா்கள், பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் கோயில்களில் புரனமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் நிறைவுற்ற நிலையில், கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சனிக்கிழமை யாகசாலை அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் ஓதி, கோயில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

விழாவில் ஒதலவாடி, ஊத்தூா், குப்பம், ஜோதிநகா், வீரசம்மனூா், பத்தியாவரம், நரசிங்கபுரம் என சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments