உலக நன்மைக்காக அரசு, வேப்பமரங்களுக்கு சிறப்பு பூஜை: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள அரசு, வேப்பமரங்களுக்கு உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெருக வேண்டியும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள அரசு, வேப்பமரங்களுக்கு உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெருக வேண்டியும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் அரசு, வேப்பமரங்கள் முன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடா்ந்து, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அரசமரம் மற்றும் வேப்பமரத்துக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னா், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் உள்ளிட்ட பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு மரங்களை வழிபட்டு, உலகில் அமைதி நிலவவும், மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவும் வேண்டி பிராா்த்தனை செய்தனா். மேலும், பக்திப் பாடல்களை பாடியபடி மரங்களை சுற்றி வந்தனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் ராமசாணிகுப்பம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.