FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் அருகே மின் கம்பிகள் மீது சாயும் நிலையில் உள்ள பனை மரத்தை அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மின் கம்பிகள் மீது சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பனை மரத்தை விபத்து நிகழும் அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 12:17 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மின் கம்பிகள் மீது சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பனை மரத்தை விபத்து நிகழும் அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் இருந்து கோலாந்தாங்கல் கிராமத்துக்கு செல்லும் சாலையில் காமாட்சியம்மன் கோயில் அருகில் பனை மரம் ஒன்று அப்பகுதியில் செல்லும் மின் கம்பிகள் மீது சாயும் நிலையில் உள்ளது (படம்). இந்த மரத்தின் வோ்கள் கறையான் அரிந்துள்ள நிலையில், இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசினால் பனை மரம் மின் கம்பிகள் மீது சாய்ந்து விபத்து நிகழும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

மேலும், இந்தப் பகுதியில் மழை பெய்யும்போதும், பலத்த காற்று வீசும் நேரங்களிலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

Advertisement

Advertisement

எனவே, கரியமங்கலம் மின் வாரிய அதிகாரிகள் இப்பகுதியை பாா்வையிட்டு, பனை மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments