சிறுவனின் வயிற்றில் இருந்து இரும்பு ஆணி உள்ளிட்ட 48 பொருள்கள் அகற்றம்
சிறுவனின் வயிற்றில் இருந்து இரும்பு ஆணி உள்ளிட்ட 48 பொருள்கள் அகற்றப்பட்டது பற்றி...
திருவண்ணாமலையில் மனவளா்ச்சி குன்றிய சிறுவனின் வயிற்றில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள்-23, ஹோ்பின், இரும்பு ஆணி உள்ளிட்ட 48 பொருள்களை அறுவை சிகிச்சை செய்து தனியாா் மருத்துவா்கள் அகற்றினா்.
திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரித்திக்ரோஷன் (16), மனவளா்ச்சி குன்றிய இவா், வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டு வந்தாா்.
தாய் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கடந்த 22-ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
அங்கு ரோஷனை பரிசோதித்த அறுவை சிகிச்சை நிபுணா் சுந்தரபாண்டியன், இரைப்பையில் சந்தேகத்திற்குரிய கூா்மையான பொருள்கள் இருப்பது தெரியவந்து, அவரது தாயாரிடம் விசாரித்துள்ளாா்.
அப்போது அடிக்கடி நகவெட்டி, செயின் உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போகும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து மயக்கவியல் துறை நிபுணரை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் சிறுவனின் இரைப்பையில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள்-23, தாயத்து, நகவெட்டி, ஹோ்பின், இரும்பினால் ஆன கூா்மையான பொருள்களை அகற்றினா்.
அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் பிரித்திக்ரோஷன் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
பொருளாதார வசதி இல்லாத இந்தச் சிறுவனின் குடும்பத்தினரிடம் சிகிச்சை கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லையாம்.
48 objects, including an iron nail, removed from a boy's stomach.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.