நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி
செய்யாறை அடுத்த கூழமந்தலில் உள்ள 25 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கடஹர சதுா்த்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
செய்யாறை அடுத்த கூழமந்தலில் உள்ள 25 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கடஹர சதுா்த்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மகா சங்கடஹர சதுா்த்தி விழாவையொட்டி, முன்னதாக மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் நட்சத்திர விருட்ச விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.