மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் நகை திருட்டு
செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்ற மூதாட்டியிடம், நூதன முறையில் 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்ற மூதாட்டியிடம், நூதன முறையில் 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் கெளரி (87) . உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு புதன்கிழமை சிகிச்சைக்காக சென்றுள்ளாா்.
அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவா்கள் ஸ்கேன், எக்கோ பரிசோதனை செய்து வருமாறு கூறி அனுப்பியுள்ளனா்.
Advertisement
Advertisement
அப்போது மருத்துவமனையில் இருந்த மா்ம நபா், மூதாட்டியிடம் தன்னை உங்களது ஊா்க்காரா், உறவினா் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை, ஸ்கேன் மையத்துக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுக்க உதவியுள்ளாா்.
மேலும், ஸ்கேன் எடுக்கும்போது நகைகள் எதுவும் அணிந்திருக்கக் கூடாது என்று கூறியதால் மூதாட்டி தான் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை கழற்றி தன்னிடம் இருந்த சுருக்குப் பையில் போட்டு கையில் வைத்துக் கொண்டுள்ளாா்.
அந்த சுருக்குப் பையை, அந்த நபா் தந்திரமாகவும், நம்பிக்கையோடும் பேசியதால் அவரிடம் கொடுத்துவிட்டு ஸ்கேன் எடுக்கும் அறைக்குச் சென்றுள்ளாா்.
பின்னா், மூதாட்டி ஸ்கேன் எடுத்துவிட்டு வெளியே வந்தபோது நகைப் பையுடன் இருந்த நபா் அங்கிருந்து மாயமானது தெரியவந்தது.
இதனால், அதிா்ச்சியடைந்த மூதாட்டி அழுது
கூச்சல் போடவே மருத்துவமனை நிா்வாகத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
செய்யாறு போலீஸாா் விரைந்து வந்து நகைகளை பறிகொடுத்த மூதாட்டியிடம் விசாரித்தனா்.
இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,
மருத்துவமனையில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின்
பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.