FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவிகள் காயம்

செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்த எம்எல்ஏ வேலு.

Updated On : 10 ஜூலை 2026, 12:05 am IST
செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்த எம்எல்ஏ வேலு.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவிகள் 5 போ் காயமடைந்தனா்.

செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவிகளுக்கு

அரசு பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காக பள்ளி முடிந்தவுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் விருப்பமுள்ள மாணவிகள் சோ்ந்து படித்துவிட்டு மாலை வீடு திரும்புகிறாா்கள்.

Advertisement

Advertisement

சிறப்பு வகுப்பு முடிந்து மேல்பள்ளிப்பட்டில் இருந்து அந்தனூா், பக்கிரிபாளையம், மேல்புழூதியூா் செல்லும் மாணவிகளுக்கு பேருந்து வசதி இல்லை. அதனால் ஆட்டோ மூலம் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை மாலை சிறப்பு வகுப்பு முடிந்து 5 மாணவிகள் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.

பாண்டியன்நகா் பகுதியில் ஆட்டோ சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவா்களை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த செங்கம் எம்எல்ஏ வேலு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மேலும், சிறப்பு வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவா்களுக்கு மேல்பள்ளிப்பட்டில் இருந்து செங்கம் வரை நகரப் பேருந்து

இயக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments