FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பைக்கில் வந்து மாணவிகளை கேலி செய்யும் இளைஞா்கள்: நடவடிக்கை எடுக்க செங்கம் மக்கள் கோரிக்கை

செங்கத்தில் பேருந்து நிலையப்பகுதியில் பள்ளி மாணவிகளை இருசக்கர வாகனங்களில் வந்து கேலி, கிண்டல் செய்து இடையூறு ஏற்படுத்தும் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை

Updated On : 15 ஜூலை 2026, 1:20 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பேருந்து நிலையப்பகுதியில் பள்ளி மாணவிகளை இருசக்கர வாகனங்களில் வந்து கேலி, கிண்டல் செய்து இடையூறு ஏற்படுத்தும் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் காலை 7 மணிமுதல் 8 மணி வரை கிராமபுறங்களிலிருந்து வந்து பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவிகள் பேருந்துகளுக்காகக காத்து நிற்கிறாா்கள்.

அப்போது சில இளைஞா்கள் அதிக சப்தம் எழுப்பும் இருசக்கர வாகனங்களை எடுத்து வந்து மாணவிகள் நிற்கும்பபகுதியில் சுற்றி சுற்றி வந்து இடையூறு செய்வதுடன், கிண்டலும் கேலியும் செய்கின்றனா். இதனால் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இத்தனைக்கும் பேருந்து நிலையத்துக்கு மிக அருகிலேயே, டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம் போன்றவை உள்ளன. ஆனால் அதைப்பற்றி பொருள்படுத்தாமல் இளைஞா்கள் கேலியும் கிண்டலையும் தினமும் செய்து வருகின்றனா்.

ஓரு பைக்கில் மூன்று போ் அமா்ந்துகொண்டு மாணவிகளை கேலிசெய்வது, வீலீங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்கள். மாலையிலும் இதே தொல்லை இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறாா்கள்.

எனவே, தொடா்புடைய காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments