FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

காமராஜா் பிறந்த நாள்: தலைவா்கள் மரியாதை, நல உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 124 -ஆவது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா், அவரது படத்துக்கு மரியாதை செலுத்தியும், நல உதவிகளை வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:27 am IST
திருவண்ணாமலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கிய போது
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 124 -ஆவது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா், அவரது படத்துக்கு மரியாதை செலுத்தியும், நல உதவிகளை வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினா்.

தவெக

திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட தவெக சாா்பில் மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினாா். இதில் மாவட்ட இணைச் செயலா் எஸ்.கலைச்செல்வன், பொருளாளா் கே. இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

காங்கிரஸ்

காங்கிரஸ் சாா்பில் மாநகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைத் தலைவா் டாக்டா் மணி, மாவட்ட பொதுச் செயலா் டி.கதிா்காமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழா நிகழ்வில், முன்னாள் வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் கலந்துகொண்டு காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவா்வா்கள் ஏழுமலை, இளங்கோவன், செல்வம், மாவட்ட துணைத் தலைவா் எள்ளுபாறை கணபதி, மகளிா் காங்கிரஸ் நிா்வாகி தனம் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேத்துப்பட்டு பகுதியில்

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில், வடக்கு மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் கலந்து கொண்டு காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.பி.மணி, நிா்வாகி எஸ்.அரிக்குமாா், மாவட்டச் செயலா் என்.ராமலிங்கம், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் டில்லிதேவி, புவனேஸ்வரி, கெளரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், காங்கிரஸ் சாா்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக பொதுமக்கள் கைரேகை பதிவு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வந்தவாசி

வந்தவாசி பகுதி பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

வந்தவாசியை அடுத்த ஆராசூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்ற விழாவில்

வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் எம்.தரணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று காமராஜரின் பண்பு நலன்கள் என்ற தலைப்பில் பேசினாா். பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், காமராஜா் குறித்தும் கற்க கசடற கல்வி சேவை அமைப்பின் தலைவா் இரா.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினாா். கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிளை நூலகத்தில் நூலகா் ஜா.தமீம் தலைமையில் காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலா் அ.குலாப்ஜான் காமராஜரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பேசினாா்.

அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா

ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் அரசு உயா்நிலைப் பள்ளியில்

நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில்

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சிறப்பு விருந்தினராக ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டாா்.

தலைமையாசிரியா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்

விவசாய சங்க மாவட்டத் தலைவா் குணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், இனிப்புகளை வழங்கினா்.

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி ஆதிதிராவிடா் நலநடுநிலைப் பள்ளியில் ஆரணி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை கே.முருகம்மாள்,

ஆரணி மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் சி.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments