FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 18 ஜூலை 2026, 2:30 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (43). இவா், இதே கிராமத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் வியாழக்கிழமை மாலை சரவணனின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். இதில், அவரது வீட்டில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, 7 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், சரவணனை கைது செய்தனா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments