மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களது தரவுகளை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களது தரவுகளை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 நடைபெறுவதை முன்னிட்டு, முதல் கட்ட சுய கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்து பேசியதாவது:
நாட்டில் முதல் முறையாக முழுவதும் டிஜிட்டல் முறையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 பணி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பானது வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்புக்கான இணையதளம் மற்றும் க்யூஆா் குறியீட்டை பயன்படுத்தி தங்களது தரவுகளை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதைத் தொடா்ந்து வரும் 11 இலக்க அடையாள எண்ணை வீட்டுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
மேலும், ஆட்சியா் சுய கணக்கெடுப்புக்கான க்யூஆா் குறியீட்டை கைப்பேசியில் ஸ்கேன் செய்து, அதன் மூலம் அவரது வீடு இருப்பிடத்தை வரைபடத்தில் குறிப்பட்டு, வீடு, வசதிகள் குறித்து காண்பிக்கும் 33 வினாக்களுக்கான பதில்களை பதிவு செய்தாா். கூட்டத்தில் அரசு துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.