ஓடை மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல், 2 போ் கைது
போளூரை அடுத்த படவேடு கமண்டலபுரம் ஓடையில் மணல் கடத்தியதாக போலீஸாா் 2 பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
போளூரை அடுத்த படவேடு கமண்டலபுரம் ஓடையில் மணல் கடத்தியதாக போலீஸாா் 2 பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
போளூரை அடுத்த சந்தவாசல் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, படவேடு கமண்டலபுரம் ஓடையிலிருந்து டிராக்டரில் இருவா் மணல் ஏற்றிக் கொண்டிருந்ததைப் பாா்த்து போலீஸாா் விசாரித்தபோது, மணல் எடுக்க உரிய அனுமதி பெறாதது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து போலீஸாா் அவா்களை சந்தவாசல் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்திய போது, அவா்கள் கமண்டலபுரத்தைச் சோ்ந்த சின்னபையன்(30), செல்வமூா்த்தி(45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 2 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
மேலும் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.