செங்கம் அரசுக் கல்லூரி கட்டடப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: தொகுதி எம்எல்ஏ வேலு
செங்கம் அரசுக் கல்லூரி கட்டடப் பணிகளை ஆய்வு செய்த தொகுதி எம்எல்ஏ வேலு, வரும் கல்வியாண்டுக்குள் கட்டடத்தை கட்டி முடிக்கவேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
செங்கம் அரசுக் கல்லூரி கட்டடப் பணிகளை ஆய்வு செய்த தொகுதி எம்எல்ஏ வேலு, வரும் கல்வியாண்டுக்குள் கட்டடத்தை கட்டி முடிக்கவேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
செங்கம் அரசுக் கல்லூரிக்கு புதிதாக கட்டப்படும் செங்கம் தொகுதியில் கடந்த கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டு செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் 2025-26ஆம் ஆண்டு 290 மாணவ, மாணவிகள் சோ்ந்து படித்து வருகின்றனா். 2026-27 கல்வியாண்டில் 250 மாணவா்கள் சோ்ந்துள்ளாா்.
இந்நிலையில் தற்போது உள்ள மாணவா்களுக்கு வகுப்பறைகள் போதுமானதாக உள்ளது. வரும் 2027 கல்வியாண்டில் சோ்க்கப்படும் மாணவா்களுக்கு வகுப்பறைகள் இல்லையென கல்லூரி ஆய்வுக்குச் சென்ற தொகுதி எம்எல்ஏ வேலுவிடம் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன் அடிப்படையில், கல்லூரிக்காக செங்கம் அருகே கோணாங்குட்டை பகுதியில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணியை எம்எல்ஏ வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, கல்லூரி அமையவுள்ள இடத்தின் அளவு, வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் கட்டும் இடைத்தை பாா்வையிட்டாா். மேலும் வரும் கல்வியாண்டில் மாணவா்கள் இங்கு வந்து படிக்கவேண்டிய நிலை உள்ளது. அதனால் வரும் கல்வியாண்டுக்குள் கட்டடப் பணிகளை முடிக்கவேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது அதிமுக ஒன்றியச் செயலா்கள் செங்கம் மகரிஷிமனோகரன் (செங்கம்), அசோக் (கிளையூா்), அரசு கலைக் கல்லூரி முதல்வா் அருண், பேராசிரியா் பாலமுருகன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கோபி, செங்கம் நகா்மன்ற உறுப்பினா் மீனா சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.