FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

வந்தவாசியில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை 2026, 1:11 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசியில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை காலை வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை வழியாக ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தச் சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

மேலும் விசாரணையில், அவா்கள் இருவரும் வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (28), வந்தவாசி சந்நிதி தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் (20) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments