FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 12:50 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாா்த்திபன் (45). இவா் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.

கடந்த வெள்ளிக்கிழமை குளிப்பதற்காக குளியலறைக்குச் சென்ற இவா் வழக்கி விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக உத்திரமேரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாா்த்திபன் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments