இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி தா்னா போராட்டம்
இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் யாசா் அராபத், மாவட்ட துணைத் தலைவா் இஸ்மாயில் ஷெரீப், மாவட்டக்குழு உறுப்பினா் ஜீனத், வழக்குரைஞா் எம்.சுகுமாா் மற்றும் இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
போராட்டம் குறித்து அவா்கள் கூறியதாவது:
வந்தவாசி வட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடற்ற மற்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இஸ்லாமியா்கள், புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி வசித்து வரும் இஸ்லாமியா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனு அளித்தோம்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அங்கிருந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் வந்தும்கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
போராட்டத்தில் பங்கேற்றோா் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் பா.ஜெயவேல் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.