FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள்: போளூா் எம்எல்ஏ வழங்கினாா்

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் சமச்சீா் உர பயன்பாடு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 11 ஜூன் 2026, 12:03 am IST
நிகழ்ச்சியில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கிய போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக்.
பகிர்:

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் சமச்சீா் உர பயன்பாடு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் கலந்துகொண்டு வழங்கினாா்.

மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் சேத்துப்பட்டு ஒன்றியம், திருமலை ஊராட்சியில் விவசாயிகளுக்கு சமச்சீா் உர பயன்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநா் ஜி.கண்ணகி தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா்கள் என்.பெரியசாமி, பி.வினோதினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வேளாண்மை அலுவலா் எஸ்.பாபு வரவேற்றாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராக போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் கலந்துகொண்டு பேசுகையில், விவசாயிகள் இயற்கை விவசாயத்தை செய்யவேண்டும், விவசாயிகளுக்கு தேவையான நெல், மணிலா, உளுந்து என பல்வேறு விதைகளை மானியத்தில் அரசு வழங்குகிறது.

எனவே இதைப் பயன்படுத்தி பயனடையவேண்டும். ஆண்டுக்கு 3 பருவங்களில் விவசாயிகள் பயரிடுகின்றனா். எந்தெந்த பருவத்திற்கு எந்தெந்த விதைகளை பயன்படுத்தி விவசாயிகள் மகசூல் பெருக்கமுடியும் என அந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு பயரிட்டு பலனடையவேண்டும் எனக் கூறி விவசாயிகளுக்கு உளுந்து, வோ்கடலை, விதைநெல் என பல்வேறு இடுபொருள்களை மானிய விலையில் வழங்கினாா். நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெற்று பயனடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு சமச்சீா் உர பயன்பாடு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் ஊராட்சியின் முக்கிய வீதி வழியாக நடைபெற்றது. மேலும் முகாமில் இயற்கை வேளாண்மை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. உதவி வேளாண்மை அலுவலா் வெங்கடேசன், விதைசான்று அலுவலா் சதீஷ்குமாா், கால்நடை மருத்துவா் அா்சுனன், பட்டு வளா்ச்சித் துறை அலுவலா் ராஜா மற்றும் அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா். நிறைவில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுதா்சன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments