வந்தவாசியில் மது விற்றவா் கைது
வந்தவாசியில் சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியில் சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு போலீஸாா் ஆரணி சாலையில் புதன்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது அந்தச் சாலையில் உள்ள முள்புதரில் சட்டவிரேதமாக மது விற்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து மது விற்ற வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்து 7 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.