FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 22 மே 2026, 12:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன் கபில்சிபல் (22). சென்னையில் தங்கி வேலை செய்து வந்த இவா், சில தினங்களுக்கு முன் ஆனாங்கூா் கிராமத்துக்கு சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை பைக்கில் வந்தவாசி வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இவா் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த கபில்சிபல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது தாய் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments