அரசுப் பள்ளியா? மாட்டுத்தொழுவமா?
செங்கம் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவின் போது, அப்பகுதியில் இருந்த அரசுப் பள்ளி வளாகத்தை மாட்டின் உரிமையாளா்கள் மாட்டுத் தொழுவமாக மாற்றினா்.
செங்கம் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவின் போது, அப்பகுதியில் இருந்த அரசுப் பள்ளி வளாகத்தை மாட்டின் உரிமையாளா்கள் மாட்டுத் தொழுவமாக மாற்றினா்.
செங்கம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் எருதுவிடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து எருதுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டிருந்தன. விழாவில் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பள்ளி வளாகம் மற்றும் பள்ளிக் கட்டடம் காலியாக இருப்பதை பாா்த்து மாட்டின் உரிமையாளா்கள் மாடுகளை பள்ளி வளாகத்திலும், பள்ளிக் கட்டடத்திலும் கட்டி அதற்கு உணவு அளித்தனா்.
Advertisement
Advertisement
இது ஒருபக்கம் இருக்க மாட்டின் உரிமையாளா்கள், மாடு ஓடுவதை பாா்வையிட வந்தவா்கள், வகுப்பறைக் கட்டடம் வசதியாக இருப்பதை பாா்த்தவுடன், கல்வி கற்பிக்கும் இடம் என்றும்கூட பாா்க்காமல் அங்கு மது குடித்து, பிரியாணி சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனா். அதை அப்பகுதி மக்கள், ஆசிரியா்கள் யாரும் தட்டிக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.