முதியவா் விஷம் குடித்து தற்கொலை
செய்யாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவா் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவா் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மேனல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன்(85). முதியவரான இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அக்.29-ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே, வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்துள்ளாா். இதனைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அதன் பின்னா், மருத்துவரின் ஆலோசனையின் பேரில்
Advertisement
Advertisement
தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.