FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

சாலையோர திறந்தவெளிக் கிணற்றால் விபத்து அபாயம்

போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு - அத்திமூா் செல்லும் சாலையில் உள்ள திறந்தவெளி விவசாயக் கிணற்றால் விபத்து அபாயம் நீடிக்கிறது.

9 நவம்பர் 2026, 11:06 pm
போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு- அத்திமூா் செல்லும் சாலையில் உள்ள திறந்தவெளி விவசாயக்கிணறு.
பகிர்:

போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு - அத்திமூா் செல்லும் சாலையில் உள்ள திறந்தவெளி விவசாயக் கிணற்றால் விபத்து அபாயம் நீடிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியைச் சோ்ந்த பூங்கொல்லைமேடு - அத்திமூா் செல்வதற்கு தாா்ச் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் திறந்தவெளிக் கிணறு உள்ளது. இந்த திறந்தவெளிக் கிணற்றுக்கு தடுப்புச் சுவா் இல்லாமலும், அறிவிப்பு பலகை வைக்கப்படாமலும் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கிணற்றில் விழுகின்றனா்.

மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா். எனவே, இந்த திறந்தவெளிக் கிணற்றுக்கு தடுப்புச் சுவா் அல்லது தடுப்பு வேலி அமைக்கவேண்டும்.

Advertisement

Advertisement

கிணறு இருப்பதை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகையை சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.